Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 நவம்பர் 09 , பி.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.நௌபர்
திருகோணமலை, மூதூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பாலத்தோப்பூர் சந்தியில் இருந்து தோப்பூருக்குச் செல்லும் நுளைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரதான பாலமானது, அகலம் குறைவானதாக அமைக்கப்பட்டிருப்பதால் இதனூடாக , கனரக வாகனங்களைத் திருப்பிக்கொள்ள முடியாது பெரும் சிரமங்களுக்கு ஆளாவதாக, வாகன ஓட்டுநர்களும் பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
இப்பாலத்தில், இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் பயணிக்கமுடியாமலுள்ளது. இதனால் சில சமயங்களில் வாகன விபத்துகளும் இடம்பெறுகின்றன.
இந்த இடத்தில் முன்னர் அமைக்கப்பட்டிருந்த கொங்றீட் பாலம், சேதமடைந்ததைத் தொடர்ந்து, இப்பாலம் தற்காலிக நிர்மாணிக்கப்பட்டதாகும்.
எனவே, பொதுமக்களும் வாகன ஓட்டுநர்களும் எதிர்கொள்ளும் அசௌகரியத்தைக் கருத்தில்கொண்டு, அகலமான பாலமொன்றாக இதனைத் திருத்தியமைத்துத் தருமாறு கோரிக்கை விடுக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 May 2025
12 May 2025