Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ்
மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைய, குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 2021/2022 ஆண்டுக்கான விளையாட்டுக் கழகங்களை புதிதாக பதிவு செய்வதற்கும் மற்றும் மீள் பதிவு செய்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குச்சவெளி பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் தெரிவித்தார்.
எனவே, விளையாட்டு உத்தியோகத்தர் மற்றும் கிராம உத்தியோகத்த்கள் ஆகியோரை தொடர்புகொண்டு, கழகங்களைப் பதிவு செய்யும் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், தங்களது கிராம சேவை பிரிவு பொது சுகாதாரப் பரிசோதகருடன் தொடர்புகொண்டு, கொவிட்ட 19 சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியும் அக்கூட்டத்தை நடத்துமாறும் அவர் அறிவித்துள்ளார்.
கழகத்தைப் பதிவு செய்வதற்காக பின்வரும் ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1.பொது கூட்டத்துக்கு விளையாட்டு உத்தியோத்தர் மற்றும் கிராம உத்தியோகத்தருக்கு அழைப்பு விடுத்த கடிதத்தின் பிரதி
2. கூட்டத்தில் கலந்துகொண்ட அங்கத்தவர்களின் வரவு உறுதிப்படுத்திய ஆவணத்தின் பிரதி
3. கழகத்தின் யாப்பு (மாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ள யாப்பை ஒத்ததாக காணப்படல்)
4. வரவு - செலவு அறிக்கை பிரதி
5. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்படிவம் (கிராம உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்)
இவை அனைத்தும் பூர்த்தி செய்து எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதிக்கு முன்னர் விளையாட்டு உத்தியோகத்தரிடம்
ஒப்படைக்கப்படல் வேண்டும். இதற்கு பின்னர் கிடைக்கப்பெறும் விண்ணப்பப்படிவங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றும் பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025