Princiya Dixci / 2021 ஒக்டோபர் 21 , பி.ப. 12:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்
“எங்களுக்கு இரசாயன பசளையே வேண்டும்; சேதனப் பசளையால் விவசாய செய்கை அறுவடையை பெற முடியாது. எங்களது வயிற்றில் அடிக்காதீர்கள்” என தம்பலகாமம் - சம்மாந்துறை வெளி விவசாய சம்மேளன உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தம்பலகாமம் பகுதியில் நேற்று (20) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
இதில் சம்மாந்துறை வெளி விவசாய சம்மேளனத்தின் உப தலைவர் க.திலகரட்ணம், செயலாளர் க. இராசலிங்கம், உப செயலாளர் க. விஜயரட்ணம், விவசாயி எம்.கிருஷ்ணப் பிள்ளை ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.
அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “சேதன உரம் காரணமாக, கலை நாசினி புல் வகைகளை முளைக்கின்றன. விளைச்சல் குறைவாக உள்ளது. சேதனை பசளை தயாரிப்பு தொடர்பில் எவ்வித அறிவும் எமக்கில்லை. இதனால் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளோம்.
“இந்த அரசாங்கம், ஆளுக்கொரு கதையை சொல்கிறார்கள். பிரதமர் ஒரு கதை, ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சர் என ஆளுக்கொரு கதையை கூறி வருகின்றனர்.
“தம்பலகாமம் பிரதேசம் ஊடாக 2,000 ஆயிரம் ஏக்கர் நிலப்ப ரப்பில் நெற் செய்கை பண்ணப்பட்டு வருகிறது. ஆனால், இம்முறை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.
“எங்களது வாழ்வாதாரமே வேளாண்மையில் தான் தங்கியுள்ளது. குடும்பங்களும் இதை நம்பியே வாழ்கிறது.
“எது எப்படியோ, விவசாயிகளுக்கு இரசாயன உரத்தைப் பெற்றுத்தருமாறு, அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றனர்.
24 minute ago
36 minute ago
41 minute ago
49 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
41 minute ago
49 minute ago