2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

விவசாயிகள் முற்றுகை; போக்குவரத்து ஸ்தம்பிதம்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 18 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக்

தங்களின் விவசாய செயற்பாடுகளுக்காக அரசாங்கம் விரைவில் இரசாயன உரத்தைப் பெற்றுத்தறுமாறு கோரி,  சேருநுவர  பிரதேச விவசாயிகள், இன்று (18) ஆர்ப்பாட்டம் ஒன்ரற முன்னெடுத்தனர்.

சேருவிலவிலுள்ள அனைத்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும்  ஒன்றிணைந்து, சேருநுவர சந்தியில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால் மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியில் போக்குவரத்தும் தடைப்பட்டது.

ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டு, விவசாயம் மேற்கொள்ளத் தேவையான உரத்தை பெற்றுத்தருமாறும் விவசாயிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் வலியுறுத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வீதியை மறித்து, கொடும்பாவிகளை ஏரித்து விவசாயிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டமையால் சிறிது பதட்டமான நிலைமை ஏற்பட்டிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X