2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

வீடுகள் கையளிப்பு...

வா.கிருஸ்ணா   / 2018 ஒக்டோபர் 20 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால், நிர்மாணிக்கப்பட்ட 141,142ஆவது வீட்டுத்திட்டங்கள் இன்று(20) காலை திறந்துவைக்கப்பட்டது.

இதன்போது, இரண்டு வீட்டத்திலும் 43 வீடுகள் திறந்துவைக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட, கொக்குவில் பகுதியில் விழுதுநகர்,சுபீட்சம் நகர் ஆகிய வீட்டுத்திட்டங்களே திறந்துவைக்கப்பட்டன.

வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாச தலைமையில் இந்த வீட்டுத்திட்டங்கள் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில், தேசிய ஒருமைப்பாடுகள்,நல்லிணக்கம், அரச கருமமொழிகள் அமைச்சின் பிரதியமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .