2025 செப்டெம்பர் 18, வியாழக்கிழமை

வீட்டு உபகராணங்கள் திருட்டு; எண்மர் கைது

Princiya Dixci   / 2022 ஜூலை 27 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது இலட்சம் ரூபாய் பெறுமதியான வீட்டு உபகராணங்களை திருடிய குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (25) இரவு 08 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை மற்றும் பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 25 வயதிலிருந்து 45 வயதுக்குட்பட்ட எட்டுப் பேரையே கைது செய்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை பகுதியுள்ள வீடொன்றை உடைத்து அங்கிருந்த மின்விசிறி, தையல் இயந்திரம், ஒலிப் பெருக்கி சாதனங்கள், இசைக்கருவி மற்றும் மின்னழுத்தி போன்ற உபகரணங்களை திருடி, சந்தேகநபர்கள் விற்பனை செய்துள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு, திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார்  மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X