Freelancer / 2022 ஜூன் 28 , பி.ப. 01:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் 
மேற்கொள்ளப்பட்டு வரும் இளைஞர் கழகங்களுக்கிடையிலான வீட்டுத் தோட்ட பயிர்ச் செய்கை நடவடிக்கை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

திருகோணமலை பீலியடி பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள கத்தரி, வெண்டி, கொச்சி மற்றும் மரவள்ளி போன்ற பயிர்கள் சிறப்பாக காணப்படுகின்றன.

இதற்கான பராமரிப்பு நடவடிக்கைகள் ஆலோசனை வழிகாட்டல்களும், பிரதேச வெளிக்கள விவசாய அதிகாரிகள் மற்றும் இளைஞர் சேவை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறான செய்கைகள் கந்தளாய், கிண்ணியா, வெருகல் மற்றும் மூதூர் போன்ற பிரதேசங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
43 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
43 minute ago
48 minute ago