Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
வடமலை ராஜ்குமார் / 2019 ஜனவரி 04 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை நகர எல்லைக்குள் உள்ள வீதியின் இரு பக்கமும் காணப்படும் பாவனைக்குதவாத வாகனங்கள், மணல், கல் குவியல்களால் பாதசாரிகளுக்கும் வாகனங்களுக்கும் பெரும் இடையூறுகளைச் சந்தித்து வருகின்றனர் என, விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அவற்றை உடனடியாக அகற்ற இன்று (04) முதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, திருகோணமலை நகராட்சி மன்றத் தலைவர் நா.இராஜநாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற போக்குவரத்து ஆலோசனைக்குழுக் கூட்டத்திலும் கலந்துரையாடப்பட்டு, இப்பொருட்களை உடனடியாக அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பாதையில் இருபக்க ஓரத்திலும் போடப்பட்ட பொருட்கள் யாவும் நகராட்சி மன்றத்தால் அகற்றப்பட்டு, பாதையை அகலமாக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வீதி ஓரத்தில் மேற்குறித்த தமது பொருட்களை வைத்துள்ளோர், அதனை உடனடியாக தமது ஆதனத்துக்குள் எடுத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த அறிவித்தலின் பின்னரும் தாங்கள் நடவடிக்கை எடுக்காவிடின், பாதையிலுள்ள பொருட்கள் யாவும் உரிமை கோராத பொருட்களாகக் கருதி அகற்றப்படும் என்பதையும் அறியத்தருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago