2025 மே 01, வியாழக்கிழமை

வீதியைப் புனரமைத்துத் தருமாறு கோரிக்கை

Editorial   / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.எல்.நௌபர்

மூதூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட முன்னெம்போடி, வெட்டை பிரதான வீதியை செப்பனிட்டுத்தருமாறு, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த வீதியூடாக, தினந்தோறும் பொதுமக்களும் மாணவர்களும் பயணித்து வருவதாகவும் இந்த வீதியில் போடப்பட்டுள்ள தார் சேதடைந்து, குன்றும் குழியுமாகக் காணப்படுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவ்வீதியூடாக, கமநல சேவை நிலையம், பாடசாலை விவசாய போதனாசிரியர் நிலையம், கோவில் ஆகியவற்றுக்கு மக்கள் சென்றுவரவேண்டியுள்ளதால், கடந்த 20 வருடங்களாகப் புனரமைக்காதுள்ள வீதியைப் புனரமைத்துத் தருமாறு, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .