2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

வீதியோர வியாபாரத்திற்கு முற்றாகத் தடை

அப்துல்சலாம் யாசீம்   / 2018 டிசெம்பர் 22 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை, நகர்ப்பகுதிகளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் வீதியோர வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என திருகோணமலை நகரசபை கோரிக்கை விடுத்துள்ளது.

திருகோணமலை நகரை அண்மித்த பிரதான வீதி, திருகோணமலை பொது வைத்தியசாலை, மக்கள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் வீதி வியாபாரங்களில் ஈடுபடுவதினால், வீதி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெறுவதாகவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான, வீதி விபத்துக்கள் நடைபெறுவதனை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே, இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதாக, நகரசபையின் அதிகாரியொருவர்  தெரிவித்தார்.

குறிப்பாக, வெளியிடங்களிலிருந்து திருகோணமலை நகர் பகுதிக்கு வருகை தந்து எவ்வித அனுமதியுமின்றி, வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அதனை உடனடியாக நிறுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதனைப் பொருட்படுத்தாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான, சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடும் வியாபாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் திருகோணமலை நகர சபையின் உயரதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X