2025 மே 02, வெள்ளிக்கிழமை

வீதியோரத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளை மோதித்தள்ளிய கார்; குடும்பஸ்தர் பலி

Princiya Dixci   / 2021 மார்ச் 30 , பி.ப. 02:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக் 

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றுடன் காரொன்று மோதியதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநனர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம், இன்று (30) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக சீனக்குடா பொலிஸார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த கார், 5ஆம் கட்டை பகுதியில் வீதியோரத்தில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஏற்பட்டுள்ள இந்த விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான திருகோணமலை கப்பல்துறை பகுதியைச் சேர்ந்த கே.அந்தோணிசாமி (48 வயது) எனும் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.

சடலம், திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X