அப்துல்சலாம் யாசீம் / 2018 நவம்பர் 20 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடி மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவனை, இன்று (20) கைது செய்துள்ளதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
திருகோணமலை பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று அதிகாலை 2 மணியளவில் குறித்த இளைஞனின் வீட்டை சோதனையிட்டபோது, டி.என்.டி என்றழைக்கப்படுகின்ற 929 கிராம் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இளைஞன், சாம்பல் தீவு, ஆத்தி மோட்டை, ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த 19 வயதுடையவர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை, வெடி மருந்துகளுடன், நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் திருகோணமலை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஒப்படைத்ததாகவும் திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் நிலாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
20 minute ago
26 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
26 minute ago
42 minute ago
1 hours ago