2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

வெட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு

Editorial   / 2017 நவம்பர் 23 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கங்கை பாலத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்கு முன்னால் இருந்து வெட்டுக் காயங்களுடனான சடலமொன்று, இன்று (23) காலை மீட்கப்பட்டுள்ளதென, பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தசிறி (வயது 50) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளாரெனவும் இவர், வீடொன்றில் தனிமையில் இருந்து குளிர்பானக் கடை நடத்தி வந்துள்ளாரெனவும் ​தெரியவருகின்றது.

சடலம், நீதவான் விசாரணைக்காக அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நபர், எதற்காகக் கொலை செய்யப்பட்டாரென, கிண்ணியா பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .