2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

வெதுப்பகங்களுக்கு பூட்டு

Princiya Dixci   / 2022 செப்டெம்பர் 07 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

திருகோணமலை, தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த வெதுப்பக உரிமையாளர்கள் நேற்று (06) தமது வெதுப்பகங்களை மூடியுள்ளதோடு, இன்றும் (07) வெதுப்பகங்களை மூடி, பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோதுமை மாவுக்கான விலை அதிகரிப்பு, தட்டுப்பாடு மற்றும் நிர்ணய விலைக்கு கோதுமை மா விற்பனை செய்யப்படாமல், பல்வேறு விலைகளின் மா விற்பனை செய்யப்படுகின்றமை போன்ற காரணங்களை முன்வத்து, இவற்றுக்கான தீர்வைப் பெற்றுத்தருமாறு வழியுறுத்தியுமே, தோப்பூர் பகுதி வெதுப்பகங்கள் மூடப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கு சரியான முறையில் பேக்கரி உணவுகளை வழங்க முடியாதுள்ளதாகவும் கடை வாடகைகளைக் கட்டுவதற்கும் சிரமப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இது விடயத்தில் அரசாங்கமும், உரிய அதிகாரிகளும் நடவடிக்கை மேற்கொண்டு, கோதுமை மாவுக்கான விலையை குறைத்துத் தருவதோடு, கோதுமை மாவை சரியான விலைக்கு விற்பனை செய்ய வியாபாரிகள் ஆவண செய்ய வேண்டுமெனவும் தோப்பூர் பிரதேச வெதுப்பக உரிமையாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .