2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

வெயிலில் மயங்கி விழுந்து ஒருவர் மரணம்

Editorial   / 2024 ஏப்ரல் 20 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சனிக்கிழமை (20) மதியம் இடம்பெற்றுள்ளது.

மூதூர் - பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்துவரும் 3 பிள்ளைகளின் தந்தையான சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.

பெரியவெளி குளத்து வயலில் சனிக்கிழமை  (20) வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியமளவில் மயக்கமுற்று விழுந்ததாகவும் உடனடியாக மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது. உயிரிழந்தவரின் சடலம் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உடற்கூற்று பரிசோதனைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும், வெயிலில் நின்று வயல் வேலை செய்கின்றவர்கள் வெயில் உச்சமான நேரங்களில் வயல் வேலை செய்வதன் தவிர்த்துக் கொள்வதன் மூலம் தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X