தீஷான் அஹமட் / 2018 ஜனவரி 10 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை, சம்பூர், சேனையூர் பகுதியைச் சேர்ந்த 37 வயது நபரொருவர், வெளிநாட்டிலிருந்து, நேற்று (09) நாடு திருப்பிய நிலையில், இன்று (10) காலை சம்பூர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.
குறித்த நபர், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளைப் பிரிந்து வாழும் நிலையில், அது தொடர்பான வழக்கு, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்துள்ளது.
இச்சந்தர்ப்பத்தில், 3 வருடங்களாக வழக்குத் தாவணைகளுக்கு சமுகமளிக்காதும், பிள்ளைகளுக்கான பராமரிப்புப் பணம் செலுத்தாமலும் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்த குற்றச்சாட்டிலே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர், ஊருக்கு வந்திருப்பதாக, சம்பூர் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையிலையே கைது செய்யப்பட்டு, பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை, மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை, சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
35 minute ago