Editorial / 2018 நவம்பர் 11 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சபேசன், எப்.முபாரக்
வெருகல் பகுதியில் வைத்து, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்ட 30 வயது குடும்பஸ்தர் ஒருவர், பிரதேசவாசிகளால் இன்று (11) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், ஒரு பிள்ளையின் தந்தையான தனபாலசிங்கம் கதீஸ்வரன் என அடையாளங் காணப்பட்டுள்ளாரென, வாகரைப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர், கடந்த 08ஆம் திகதி, வெருகலிலுள்ள தனது மனைவியின் வீட்டிலிருந்து உறவினர் வீட்டுக்குச் சென்ற வேளையில், வெள்ளநீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
அன்றிலிருந்து தேடப்பட்டுவந்த குறித்த நபர், வெருகல், முட்டுச்சந்துப் பகுதியில் வைத்து நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த வாகரைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago