Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 18 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ் , ஹஸ்பர் ஏ ஹலீம்
அண்மையில் பெய்த தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட உப்பாறு, மைலப்பன்சேனை, சோலைவெட்டுவான், காரவெட்டுவான் ஆகிய பகுதி மக்களுக்கு, பிரதேச செயலாளர் முஹம்மது ஹனியினால் நேற்று (17) உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுக்கும் முயற்சியின் முதல் கட்டமாக 64 குடும்பங்கள் இதற்காகத் தெரிவுசெய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து மேலும் 36 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கப்படவுள்ளன.
கிண்ணியா பிரதேச செயலாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.றியாத், Serving Humanity Foundation நிறுவனத்தின் தலைவர் எம்.டீ.ஜரூக், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நிறுவன ஊழியர்கள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago