2025 ஜூலை 31, வியாழக்கிழமை

வைத்தியசாலைக்குள் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்

Janu   / 2025 ஜூன் 01 , பி.ப. 02:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த சில நாட்களாக திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரை துறைமுக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் சிற்றூழியர் போன்ற சீருடை அணிந்து நோயாளர்களின் கையடக்க தொலைபேசிகள் மற்றும் பணம் போன்றவற்றை ஏமாற்றி கொள்ளையாடி வந்துள்ளதாக  தெரியவந்துள்ளது. 

இவ்விடயம்  தொடர்பில் துறைமுக பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளை அடுத்து திருகோணமலை நகரிலுள்ள கடையொன்றுக்கு சென்று கையடக்க தொலைபேசிகளை விற்பனை செய்வதற்காக பேசிக் கொண்டிருக்கும் போது பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் மாவனல்லை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. 

சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

 எப்.முபாரக் 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .