2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலையில் யாருமில்லை; அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

அப்துல்சலாம் யாசீம்   / 2017 நவம்பர் 23 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சந்தேகநபரொருவரைப் பார்வையிட  நீதவான் சென்ற போது, கடமையில் எவரும் இருக்கவில்லையென்பதால், அது தொடர்பில் நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு, வைத்தியசாலை பணிப்பாளருக்கு, நீதவான் உத்தரவிட்டார்.

நேற்று (22) மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றுக்குள் அத்துமீறிப் புகுந்த நபரொருவரை, பொதுமக்கள் நையப்புடைத்ததால், அவர் காயமுற்ற நிலையில், கிண்ணியா தள வைத்தியசாலையில் பொலிஸார் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சந்தேகநபரை நேரில் பார்வையிட்டு விசாரணைகளைச் செய்வதற்காக திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா, சந்தேகநபர் சிகிச்சை பெற்று வரும் வாட்டுக்குச் சென்றுள்ளா​ர்.

அவ்வேளையில், சந்தேகநபர் குறித்து விசாரிப்பதற்காக வைத்தியரோ அல்லது தாதியரோ கடமையில் இருக்கவில்லையென குற்றஞ்சாட்டப்படுகின்றது.

எனவே, இது விடயமாக நீதிமன்றத்துக்கு  அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு,  கிண்ணியா தள வைத்தியசாலை பணிப்பாளருக்கு, நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X