2025 மே 22, வியாழக்கிழமை

ஹஜ் முகவர் நியமனம் பெற 150 முகவர் நிலையங்கள் விண்ணப்பம்

Niroshini   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக் 

இவ்­வ­ரு­டத்­துக்­கான ஹஜ் முகவர் நிய­மனம் பெற்றுக் கொள்­வ­தற்­காக நூற்றி முப்பது  முகவர் நிலை­யங்கள் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு விண்­ணப்­பித்­துள்­ளதாக அத்திணைக்களத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

முகவர் நிலை­யங்­களை தெரி­வு­செய்­வ­தற்­கான நேர்­மு­கப்­ப­ரீட்சை எதிர்­வரும் 2ஆம் திகதி முதல் 6ஆம் திகதி வரை நடை­பெ­ற­வுள்­ளதாகவும் உயர் நீதி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றை­களின் படியே
நேர்­மு­கப்பரீட்சை நடத்தி புள்­ளிகள் வழங்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் முகவர் நிலை­யங்­க­ளுக்கு எதி­ராக கடந்­த­
கா­லங்களில் முறைப்­பா­டுகள் ஏதும் கிடைத்­தி­ருப்பின் அது கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­டு­மெ­னவும் முஸ்லிம் சமய கலா­சார அலு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எச்.எம்.சமீல் அறிவித்துள்ளார்.

மேலும், இவ்­வ­ருடம் ஹஜ் கட­மையை நிறை­வேற்­று­வ­தற்­காக இது­வரை 4400 விண்­ணப்­பங்கள் கிடைக்கப் பெற்­றுள்­ள­தா­கவும் ஹஜ் பய­ணத்தை உறுதி செய்­யு­மாறு 3,000 விண்­ணப்­ப­தா­ரி­க­ளுக்கு திணைக்­களம் கடிதங்­களை அனுப்­பி­வைத்­துள்­ள­தா­கவும் கடிதம் கிடைக்­கப்­பெற்­ற­வர்கள் தமது பய­ணத்தை
திணைக்­க­ளத்­திடம் உறுதி செய்­து­கொள்ள வேண்டும் எனவும் பணிப்பாளர் கேட்டுள்ளார்.

திணைக்களம் ஹஜ் கடமைக்கான விண்ணப்பங்களை தொடர்ந்தும் ஏற்றுக்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .