2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

‘ஹபாயா’ அணிந்து தப்பியவர் சிக்கினார்

Editorial   / 2024 ஜூன் 27 , பி.ப. 02:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ. எம். கீத் , ஏ.எச். ஹஸ்பர் 

54 வயதான தாயையும் அவருடைய 31 வயதான மகளையும் கத்தியால் குத்திய நபரொருவர், முகத்தை முழுமையாக மூடும் ஹபாயை அணிந்துகொண்டு தப்பிக்க முயன்றபோது கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம், தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஈச்சநகர் பகுதியில், புதன்கிழமை (26) மாலை இடம்பெற்றுள்ளது. ஹபாய் அணிந்து​கொண்டு தப்பிக்க முயன்ற 38 வயதான குடும்பஸ்தரே கைது செய்யப்பட்டுள்ளார் என தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தார்.

மூதூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர், ஈச்ச நகர் பகுதியில் திருமணம் முடித்து வசித்து வருகின்றனார்.  

 தாக்குதளுக்கு இலக்காகி படுகாயமடைந்த தாய், மட்டக்களப்பு பொது வைத்தியசாலையிலும், மகள்,  கந்தளாய் தளவைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்றுவருகின்றனர். . 

ஈச்ச நகர் பகுதியிலுள்ள தாக்குதலுக்கு இலக்காக பெண்ணிடம் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடனுக்கு பணம் வாங்கியுள்ளார். அதனை மீள பெற்றுக்கொள்வதற்காக, சந்தேகநபரின் அலைபேசி  திருத்த கடைக்கு அப்பெண் சென்று கேட்டுள்ளார்.

எனினும், ஆத்திரமடைந்த அந்தநபர் பணத்தை திருப்பிக்கொடுக்காது, அந்த பெண்ணின் வீட்டுக்குச் சென்று, தாய், மகள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.

அதிலிருந்து தப்புவதற்காக முகத்தை மூடி  ஹபாயா அணிந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.   சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக  தம்பலகாமம் பொலிஸார்  தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X