2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் திருகோணமலையில் இருவர் கைது

Princiya Dixci   / 2021 ஜூலை 15 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.கீத்

திருகோணமலை துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து ஹெரோய்ன் போதைப்பொருடன், நேற்று மாலை 6 மணியளவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என துறைமுக பொலிஸார் தெரிவித்தனர். 

திருகோணமலை கடற்படையினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் நேற்று (14) மாலை கைதுசெய்யப்பட்டுள்ள இவர்களிடமிருந்து 4 கிராம் 900 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட ஹெரோய்ன் போதைப்பொருளை மற்றுமொரு நபருக்கு விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட நிலையில், இக்கைதுகள் இடம்பெற்றதாகவும்  4ஆம் மற்றும் 5ஆம் கட்டை, கண்டி வீதியைச் சேர்ந்த 23 வயது இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் துறைமுக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X