2025 மே 03, சனிக்கிழமை

ஹெரோய்னுடன் நால்வர் கைது

அப்துல்சலாம் யாசீம்   / 2019 மார்ச் 06 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெவ்வேறு பகுதிகளில், ஹெரோய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், நேற்று முன்தினம் (04) இரவு, நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தளாய் பிராந்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், வெவ்வேறு இடங்களில் குறித்த நால்வரையும் கைதுசெய்துள்ளனர்.

கந்தளாய், திஸ்ஸபுர பகுதியில் 1,142 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இவ்விளைஞன் வழங்கிய தகவலையடுத்து, 2,024 மில்லிக்கிராம் ஹெரோய்ன் போதைப்பொருளைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கன்தளாய்-பாத்தியகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய மற்றுமோர்  இளைஞனும் கைதுசெய்யப்பட்டதாக, கந்தளாய் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி  கேதி விக்ரமரத்ன தெரிவித்தார்.

அத்துடன், அக்போபுர பகுதியில் 183 மில்லிக்கிராம் ஹெரோய்னுடன்  31 வயது நபரொருவரும் 286 மில்லிக்கிராம் ஹெரோய்னுடன் ரஜ-எல பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவரையும் கைதுசெய்துள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X