2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த மூவருக்கு தடுப்பு காவல்

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், எப்.முபாரக்

அலஸ்தோட்டப் பகுதியில் 7 கிராமும் 440 மில்லிகிராம் ஹெரோய்னுடன் கைதுசெய்யப்பட்ட மூவரையும், எதிர்வரும் 17ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு, திருகோணமலை நீதிமன்ற பிரதான நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா அனுமதியளித்தார்.

திருகோணமலை, தலைமையக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு அலஸ்தோட்டம் பகுதியிலுள்ள ஹோட்டலொன்றினுள் ஹெரோய்ன் பெகட் செய்யப்படுவதாக வழங்கப்பட்ட இரகசியத் தகவலையடுத்து, முதலாவதாக சந்தேகநபரொருவர், ஞாயிற்றுக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் பெறப்பட்ட தகவலையடுத்து, மற்றைய இருவரும் கைதுசெய்யப்பட்டதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

முதலாவது சந்தேக நபரிடம் 5 கிராமும் 70 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாகவும் இச்சந்தேகநபர் மொறவெவ - மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்றும் அதே இடத்தைச் சேர்ந்த 33 வயதுடைய இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து 1 கிராமும் 300 மில்லி கிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், ஹோட்டலில் அறையொன்றை வாடகைக்குப் பெற்று தங்கியிருந்த கொழும்பு-10 மாளிகாவத்த பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து 1 கிராமும் 70 மில்லிகிராம் ஹெரோய்ன் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X