2025 மே 02, வெள்ளிக்கிழமை

மழையினால் ஹம்பாந்தோட்டையில் 330 குடும்பங்கள் பாதிப்பு

Super User   / 2012 நவம்பர் 25 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.இஸட்.எம்.இர்பான்)

ஹம்பாந்தோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையின் காரணமாக 330 குடும்பங்களைச் சேர்ந்த 900 இற்கும் மேற்பட்டோர் வெள்ளத்தினால் பாதிப்பிற்கு உள்ளனர் என மாவட்ட அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்தது.

ஹம்பாந்தோட்டை, வெலிகத்தை, அம்பலாந்தோட்டை, ஹுங்கம, ரன்ன, வீரகெடிய, வலஸ்முல்லை மற்றும் பெலியத்தை போன்ற பிரதேசங்களே வெள்ளத்தினால் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.

அத்துடன் குளங்களும் பெருக்கெடுத்துள்ளதுடன் விவசாய காணிகளும் நெல் வயல்களும் நீரில் மூழ்கியுள்ளன. இடம்பெயர்ந்த மக்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X