2026 பெப்ரவரி 01, ஞாயிற்றுக்கிழமை

நடமாடும் விபசார வண்டி முற்றுகை: சாரதி உட்பட 3 பெண்கள் கைது

Kogilavani   / 2013 மார்ச் 20 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.மும்தாஜ்

மாரவில பகுதியில் நடாமடும் விபாசார முச்சக்கர வண்டி ஒன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன்  வண்டி சாரதி உட்பட மூன்று பெண்களை கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலினை தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மாரவில பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் மேற்படி நால்வரையும் கைதுசெய்துள்ளதுடன் முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட பெண்கள் மாராவில மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த 26 - 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

போலியான வாடிக்கையாளர் ஒருவரைப் பயன்படுத்தியே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட பெண்கள், சாரதி மற்றும் கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டியை மாராவில நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில்  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0

  • MADURANKULI KURANKAR Wednesday, 20 March 2013 05:06 PM

    முச்சக்கர வண்டி என்பதை பெயர் மாற்றலாம்..!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X