2025 செப்டெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

சிறுமிகளை வைத்து விபசாரம்: 9 பேர் கைது

Kanagaraj   / 2013 பெப்ரவரி 24 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டு வயதுக்கும் குறைந்த சிறுமிகளை வைத்து விபசாரம் நடத்திய சம்பவம் ஒன்று மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.

விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமிகள் ஐவர் உட்பட பெண்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மாத்தறை பொல்ஹேன பகுதியில் மிகவும் இரகசியமான முறையில் இயங்கிவந்த விபசார விடுதியே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்தவர்கள் கைது செய்யப்பட்டதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்தனர்.

1000 ரூபாய் கொடுத்து வாடிக்கையாளர் ஒருவர் போன்று சென்ற பொலிஸ் அதிகாரியே குறித்த பெண்களை கைது செய்துள்ளதுடன் சிறுமிகளையும் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமிகளுக்கென தனியான அறையொன்று அமைக்கப்பட்டிருந்ததாகவும் வெளிநாட்டவர்களும் வந்து சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட பெண்கள் மூவரும் அனுராதபுரம் மற்றும் சிலாபம் போன்ற பிரதேசங்களைச்சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0

  • Mutabi3 Sunday, 24 February 2013 05:49 PM

    இந்த செய்தியை பிரசுரிகாமலேயே இருந்திருக்கலாம். கேடு கேட்ட சமூகம். இல்லாமையில் இருந்த ஒன்றை பிரச்சினையாக்கி “ஹலால்” வேண்டாம் என்று போர் தொடுக்கின்றீர்களே... உங்கள் வக்கிர சமூகத்தை , அதன் நடத்தையை மாற்ற முயற்சிக்கலாமே???

    Reply : 0       0

    MADURANKULIKURANKAAR Sunday, 24 February 2013 09:25 PM

    சதை வியாபாரம். இப்போது சந்தை வியாபாரமாகிவிட்டது. கீப்பி டெப்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .