Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2012 மார்ச் 18 , பி.ப. 05:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரோ)
பெத்தேகமைவில் இன்று நடைபெறவிருந்த இஹல லெல்வெல கூட்டுறவு சபைத் தேர்தலை ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான நிஷாந்த முத்துஹெட்டிகம பலவந்தமாக நிறுத்தியதாக ஐ.தே.கவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஐ.ம.சு.கூ. உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் சிலருடன் முத்துஹெட்டிகம எம்.பி. கூட்டுறவு வளாகத்திற்குள் வந்து வாக்கெடுப்பை நிறுத்தியதாக அப்பகுதியின் ஐ.தே.க. அமைப்பாளர் ஆனந்த லனரெல்ல கூறினார்.
இச்சபைக்கு ஐ.தே.க. உறுப்பினர்கள் பெரும்பான்மையாக தெரிவாகுவதை தடுப்பதற்காகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஆனந்த லனரெல்ல கூறினார். முன்னர் நடந்த தேர்தலொன்றில் 85 உறுப்பினர்களில் தமது கட்சி 55 உறுப்பினர்களை பெற்றதாகவும் அவர் கூறினார்.
முத்துஹெட்டிகம எம்.பி. தேர்தலை நிறுத்த விரும்பினால் அவர் நீதிமன்ற உத்தரவை பெறுவதன் மூலம் அதை செய்திருக்க வேண்டுமு; எனவும் லனரெல்ல கூறினார்.
எனினும் கூட்டுறவு சபையின் பிரதி ஆணையாளரினாலேயே வாக்கெடுப்பு நிறுத்தப்பட்டதாக முத்துஹெட்டிகம எம்.பிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன. அவர் அங்கு சமுகமளித்திருந்தாலும் அவர் வாக்களிப்பை நிறுத்துவதில் எந்த பங்கையும் வகிக்கவில்லை எனவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago