2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ஹம்பாந்தோட்டையில் வெள்ளத்தினால் பல வீடுகள் சேதம்

A.P.Mathan   / 2012 நவம்பர் 30 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.இஸட்.எம்.இர்பான்)


ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையின் காரணமாக உடவளவை நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் வளவை கங்கையின் நீர்மட்டம் உயர்ந்து, அதனைச் சூழவுள்ள 330 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளன.

மெலேகொலனி, வலவேவத்த, போலான, புஹூல்யாய, கல்லெலிதொட, பொரலெஸ்ஸ போன்ற பிரதேசங்களே இவ்வாறு வெள்ளத்தினால் பாதிப்படைந்துள்ளன. 10 வீடுகள் முற்றாக சேதமடைந்து 60 வீடுகள் பாதியளவில் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அம்பலாந்தோட்டை பிரதேச செயலகத்தினால் உதவிகள் வழங்கப்பட்டு வருவதோடு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர இவர்களுக்கு சமையல்; உபகரணங்களை வழங்கிவைத்தார்.

இத்தோடு வெஹெரகல நீர்த்தேக்கத்தின் சகல வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதனால் கதிர்காம மாணிக்க கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதோடு நீராடும் பிரதேசங்களில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லுனுகம்ஹெரை நீர்த்தேக்கத்தினதும் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதோடு கிரிந்தி ஓயாவின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .