2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

ரதம்பல புது நகரம் இன்று மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது

Super User   / 2012 டிசெம்பர் 12 , மு.ப. 07:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


புது நகர நிர்மாண திட்டத்திற்கு அமைய அமைக்கப்பட்ட மாத்தறை, ரதம்பல புது நகரம் இன்று புதன்கிழமை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளது.

மிகவும் பழமையானதும் மற்றும் நீண்டகால வரலாற்றைக் கொண்டதும் பல நூற்றாண்டு காலமாக தனியாக இருந்து ஒரு நகரமான ரதம்பல நகரத்தை புதுத் திட்டங்களுக்கு அமைய புது வடிவில் அமைக்கப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த நகரம் இன்று நள்ளிரவு 12 மணிக்கு 12 நிமிடங்கள் இருக்கும்போது அமையும் சுப நேரத்தில் மக்களின் கையளிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வில் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தின் அரசியல் தலைமைத்துவத்தை வகிக்கும் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின் பூரண கண்காணிப்பின் கீழ் இந்த நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது.

ரதம்பல நகரத்திற்கு நுழையும் சகல பாதைகளையும் காபட் இட்டு அபிவிருத்தி செய்துள்ளதோடு புது மணிக் கூட்டு கோபுரம் அழகான வாவி, புது சந்தை கட்டிடத்தொகுதி மற்றும் அரசாங்க அலுவலகங்கள் ஆகியன நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நேரடி நிதியுதவிகள் மற்றும் அமைச்சுகளின் வருடாந்த ஒதுக்கு நிதிகளை முகாமை செய்து இந்த ரதம்பல நகரம் புனரமைக்கப்பட்டுள்ளது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .