2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

அடைமழையால் ஹம்பாந்தோட்டை ஸ்தம்பிதம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.இஸட்.எம்.இர்பான்)


ஹம்பாந்தோட்டையில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஹம்பாந்தோட்டை மாநகர எல்லைக்கு உட்பட்ட சிப்பிக்குளம், சாமோதாகம, ராஜபக்ஷ மாவத்தை, சிரிபோபுர,டாகட் வீதி, மெத்செவன, பகுதிகள் 300 இற்கும் மேற்பட்ட வீடுகள் முற்றாக நீரில் முழ்கியுள்ளன.

வெஹெரகல, உடவளவை நீர்தேக்கங்களின் நான்கு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதனால் மாணிக்க கங்கை, வளவை கங்கை கரையோரங்களில் வசிப்போருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை, கன்னொருவ வீதி, கதிர்காமம் - கொழும்பு வீதிகளின் பல பகுதிகள் முற்றாக நீரில் மூழ்கி போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உப்பளமும், வயல் வெளிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

திஸ்ஸமகாராமை, கிரிந்தை, தெபரவௌ, வீரவில, பதகிரிய, பல்லேமலல, உடமலல, அம்பலாந்தோட்டை, தங்காலை, பெலியத்தை போன்ற பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .