Editorial / 2024 ஜூலை 30 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இருவரும் புதருக்குள் இருந்த நிலையில், பிரதேசவாசிகள் அவ்விருவரையும் பிடித்து, பொலிஸில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இளைஞனை மொனராகலை பொலிஸார் கடந்த 30 ஆம் திகதி கைது செய்துள்ளனர்.
சிறுவர் இல்லத்தில் இருந்த 15 வயதான சிறுமி, சிறுவர் இல்லத்துக்கு அருகே உள்ள தோட்டத்தில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 28 வயது இளைஞனுடன் காதல் உறவில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சிறுவர்கள் இல்லத்தில், அச்சிறுமியை கடந்த 26ம் திகதி காணவில்லை. அதனையடுத்து தேடியபோது, முட்புதரில் இளைஞன் ஒருவருடன் இருந்துள்ளார்.
சிறுமியுடன் இருந்த சந்தேக நபர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவ்விளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
21 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago