2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

09ஆவது நாடாளுமன்றை கூட்டும் வர்த்தமானி வெளியானது

Editorial   / 2020 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

09ஆவது நாடாளுமன்றின் முதலாவது கூட்டத்தொடர் ஓகஸ்ட் 20 வியாழக்கிழமை முற்பகல் 09.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

அரசியலமைப்பின் 70ஆவது உறுப்புரையில் குறிப்பிட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய,  ஜனாதிபதியால் இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் பீ.பி.ஜயசுந்தரவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை,  ஜனாதிபதியால் நேற்றைய தினம் மேலும் சில வர்த்தமானி அறிவித்தல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை, பிரதமரின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டமை,  அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், அமைச்சரவை செயலாளர் மற்றும் அமைச்சுகளின் செயலாளர்கள் தொடர்பில் இந்த வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X