2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

‘2 ஆவது அலை வைரஸ் வீரியமானது’

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 31 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இரண்டாவது அலையை ஏற்படுத்தியுள்ள கொவிட் – 19 வைரஸ் அதிக வீரியமானது என ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியில் இருந்து தெரியவந்துள்ளது. அத்துடன், அ​ந்த வைரஸ், தொற்றுநோயை பரப்பும் தன்மையை கொண்டுள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போது பரவி வரும் கொவிட் – 19 வைரஸில், ‘B.1.42‘ எனும் ரகத்தைச் சேர்ந்த மிகவும் வீரியம் கொண்ட வைரஸாகும் என்பது இனங்காணப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே என்பவரினால் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இலங்கையில் ஏற்கெனவே இனங்காணப்பட்ட கொத்தணி வைரஸ்கள் B.1, B.2, B 1.1 மற்றும் B.4 எனும் ரகங்களைச் சேர்ந்தவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

பெரும் பரவலை ஏற்படுத்திய வைரஸ் வகையை விட இந்த வைரஸ் வகைகள் மிக வேகமாக மனிதர்களுக்கிடையில் பரவும் வல்லமையை கொண்டது என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X