2025 மே 08, வியாழக்கிழமை

20இல் அதிரடி

Editorial   / 2020 செப்டெம்பர் 03 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

  • 30 வயதில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டி
  • ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய இயலாது
  • அமைச்சரவை நியமனத்தில் பிரதமரின் ஆலோசனை தேவையில்லை
  • ​அமைச்சரவையின் வரையறை இரத்து
  • ஆணைக்குழு நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம்

புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அங்கிகாரமளிக்கப்பட்ட அரசமைப்பின் 20ஆவது திருத்தம் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல், 2020.09.02 திகதியிட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அரசமைப்பிd; 19ஆவது திருத்தத்தில் சில திருத்தங்களை மேற்கொள்வதற்காக, தங்களுக்கு மூன்றிலிரண்டுப் பெரும்பான்மையை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கோரியிருந்தது. அதன்பிரகாரம், அதிகாரம் கிடைத்தவுடன் ஆட்சிப்பீடமேறிய அரசாங்கம், 20ஆவது திருத்தத்தை அதிரடியாய் தயாரித்தது.

அந்தத் திருத்தத்தில், பல்வேறான விடயங்கள் மீள்திருத்தத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள போதிலும், சில முக்கியமான விடயங்களும் மீள் திருத்தத்துக்கு உள்ளடக்கப்பட்டுள்ளன.

19ஆவது திருத்தத்தின் பிரகாரம், ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ​இடையில் முரண்பாடுகள் தோன்றியிருந்தன. அதனைக் களையும் வகையிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஜனாதிபதிக்கான அதிகாரம் 20ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதில், ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யமுடியாது. ஆணைக்குழுக்களை ஜனாதிபதி நியமிக்க வேண்டும் என்பது பிரதானமானதாகும். அத்துடன், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதெல்லை, 19ஆவது திருத்தத்தில் 35ஆகக் குறிப்பிடப்பட்டிருந்தது, அது 30ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையில், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளுக்கான செயலாளர்களை நியமிக்கும் போது, பிரதமரின் ஆலோசனைகளை ஜனாதிபதி கேட்கவேண்டுமென்ற சரத்து, 19ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

எனினும், தனக்குத் தேவையேற்படின், மேலே குறிப்பிட்ட விவகாரங்களுக்காக, பிரதமரிடம் ஜனாதிபதி ஆலோசனைகளைக் கேட்டறிந்துகொள்ளலாம். இல்லையேல், அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், அவர்களுக்கான விடயதானங்கள், செயலாளர்களை, தான் விரும்பியவாறு ஜனாதிபதியால் மாற்றமுடியும்.

இதேவேளை, பதில் அமைச்சர்கள், பதில் இராஜாங்க அமைச்சர்களை நியமிக்கும் போதும் பிரதமரிடம் ஜனாதிபதி ஆலோசனைகளைக் கேட்கவேண்டியதில்லை. விரும்பினால் மட்டுமே ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், அமைச்சரவையை நியமிப்பதற்கான வரையறையும், இரத்துச் செய்யப்பட்டு திருத்தப்பட்டுள்ளது.

அரச சேவைகள் ஆணைக்குழு, ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டதாக அமைந்திருக்க வேண்டும். அதில் மூவர், அரச சேவையில் 15 வருடங்களுக்கு மேல் பணியாற்றியிருக்க வேண்டும். ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்களையும் ஜனாதிபதி நியமிப்பதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசமைப்பின் 135ஆம் திருத்தமும் அதன் உப-பிரிவுகளும், முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. கணக்காய்வாளர் தலைமையதிபதி ஒருவாகர் இருத்தல் வேண்டுமென்பதுடன், அவர் தகைமை பெற்ற கணக்காளராக இருத்தலும் அவர்,டு அரசமைப்புப் பேரவையின் விதப்புரைகளுக்கமைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல, “1978ஆம் ஆண்டு அரசமைப்பில், 2015ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்ட 19ஆவது திருத்தம் காரணமாக ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் குறைபாடுகளைத் தவிர்ப்பதற்காக, குறுகியகால நடவடிக்கையாக 20ஆவது திருத்தத்துக்கான சட்டமூலத்தை உருவாக்கப்பட்டது” என்றார்.

இந்த 20ஆவது திருத்தமானது, 13ஆவது திருத்தம் மற்றும் அதற்கு ஏற்புடையதாகாதது என்பதுடன், அரசமைப்பின் 82 (5)க்கு அமைவாக நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு குறையாத வாக்களிப்புடன் நிறைவேற்றக் கூடியநிலை இருப்பதாக, சட்ட மா அதிபர் மற்றும் சட்டமூல வரைபுத் திணைக்களம் என்பன, இதற்குத் தேவையான உறுதிப்படுத்தலை வழங்கியதைக் கருத்திற்கொண்டு, அமைச்சரவையின் கவனத்தில் கொண்டு அந்த சட்ட திருத்தமூலத்தை அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடுவதற்கும், அதனைத் தொடர்ந்து அங்கீகாரத்திற்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தின் முழுமையான உள்ளடக்கங்களை அறிய, கீழே காணப்படும் Linkஐ Click செய்யவும். 

https://www.dgi.gov.lk/images/pdf/2020/PL_011963_Gazette_suppleiment_T.pdf


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X