2025 மே 06, செவ்வாய்க்கிழமை

‘21 நாள்கள் அவதானம் மிக்கவை’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 22 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 3 வாரங்கள் மிகவும் அவதானமிக்கவை என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாள்களாக மக்கள் செயற்பட்ட விதத்தால், நாட்டில் மீண்டும் கொரொனா வேகமாகப் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ​அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, தொடர்ச்சியான விடுமுறைகளைக் கொண்ட வார இறுதி நாள்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் பல்வேறு நிகழ்வுகள், கொண்டாட்டங்கள் என்பவற்றை ஏற்பாடு செய்வதையும் தவிர்க்குமாறும் இராணுவத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X