Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
J.A. George / 2020 நவம்பர் 02 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு முக்கிய வகைகளின் அடிப்படையில் இலங்கையில் கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் பதிவாகின்றதாக சுகாதார அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
நேரடியான கொரோனா உயிரிழப்பு மற்றும் மறைமுகமான கொரோனா வைரஸ் தொடர்பான உயிரிழப்புகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர்களுக்கு வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படும்போது உயிரிழந்தால் அது நேரடியான கொரோனா மரணம் எனப்படும்.
அதேநேரம், விபத்து அல்லது தற்கொலை போன்ற பிற காரணங்களால் இறந்த ஒருவர், பிரேத பரிசோதனையின் போது நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து வைரஸ் பாதிப்புக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டால் அது மறைமுகமான கொரோனா வைரஸ் தொடர்பான மரணம் எனப்படும்.
இலங்கையில் 22ஆவது கொரோனா தொடர்பான மரணம் என்று கூறப்பட்ட இளைஞன் தற்கொலை செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர ஊடகங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago