2025 மே 07, புதன்கிழமை

27 வயதான யுவதியை கொன்றது கொரோனா

Editorial   / 2020 நவம்பர் 20 , மு.ப. 02:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், நேற்று (19) மட்டும், நால்வர் மரணமடைந்துள்ளனர்.

அவர்களுடன் சேர்த்து கொரோனா வைரஸினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73ஆக அதிகரித்துள்ளது.

கொழும்புக்கு வெளியே களுத்துறை மாவட்டத்தில் இரண்டு பேர் மரணித்துள்ளனர்.

கொழும்பு 10 ஐச் ​சேர்ந்த 70 வயதான ஆணொருவர் மரணமடைந்துள்ளார்.

கொழும்பு 15ஐச் சேர்ந்த, 27 வயதான யுவதியும் மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் ஏனைய மரணங்கள் இரண்டும் கொழும்புக்கு வெளியே களுத்துறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

59 வயதான பெண்ணும், 86 வயதான ஆணுமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X