Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Editorial / 2019 டிசெம்பர் 27 , பி.ப. 02:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
UPDATE 04.48: முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சை பெற்று வரும் தனியார் வைத்தியசாலைக்கு சென்ற கொழும்பு மேலதிக நீதவான், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, குற்றப்புலனாய்வு பிரிவினரால் (சி.ஐ.டி), சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டார்.
வெள்ளை வான் விவகாரம் தொடர்பான ஊடகச் சந்திப்பொன்றை நடத்தி, பொய்யான தகவல்களை வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவரைக் கைது செய்யுமாறு, கொழும்பு மேலதிக நீதவான் பண்டார நெலும்தெனியவினால், கடந்த 24ஆம் திகதியன்று, பிடியாணை பிறப்பிக்கப்பட்டு இருந்தது.
இந்தப் பிடியாணையை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு, ராஜித எம்.பியின் சட்டத்தரணிகளால், இன்றைய தினமும் மூன்றாவது முறையாக, நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும், கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன, அந்த மனுவை நிராகரித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
32 minute ago
41 minute ago