Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
R.Maheshwary / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அண்மையில் மஹர சிறையில் ஏற்பட்ட அமைதியின்மையால் உயிரிழந்த கைதிகளுள் நால்வர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனரென, நிபுணர்கள் குழு நடத்திய பிரேத பரிசோதனையின் போது தெரியவந்துள்ளது.
குறித்த பிரேத பரிசோதனையானது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசேட நிபுணர் குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மஹர சிறையில் இடம்பெற்ற அமைதியின்மையால் 11 கைதிகள் உயிரிழந்ததுடன், இதில் நால்வரின் பிரதேச பரிசோதனைகளே இதுவரை நிறைவுசெய்யப்பட்டுள்ளன.
குறித்த சடலங்களை தகனம் செய்யாமல் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்குமாறு,உயிரிழந்த கைதிகளின் உறவினர்கள் நீதிமன்றில் இன்று (16) கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் இதற்கு கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய உயிரிழந்த கைதிகளின் உறவினர்களுடைய கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இந்த நான்கு கைதிகளின் சடலங்களை இன்றும் (16) நாளையும் 17) தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை நவம்பர் மாதம் 29ஆம் திகதி மஹர சிறையில் இடம்பெற்ற அமைதியின்மையால் 11 கைதிகள் உயிரிழந்த நிலையில், அதற்கு மறுநாள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, உயிரிழந்த கைதிகள் எவரும் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழக்கவில்லை என பிரேத பரிசோதனை மூலம் தெரியவந்தள்ளதென தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago