2025 மே 07, புதன்கிழமை

’72 கன்னிப் பெண்களை அடைய எதனையும் செய்வார்கள்’

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 07 , மு.ப. 06:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதத் தீவிரவாதிகள் சொர்க்கத்துக்குச் சென்று 72 கன்னிப்பெண்களை அடைவதற்காக எதனையும் செய்வார்கள் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சகோதரப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலின்போதோ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்;

 புலனாய்வு சேவையில் ஏற்பட்ட பின்னடைவே இதற்கு முக்கிய காரணமாகும். அவ்வேளை, மூன்று புலனாய்வு படைப்பிரிவுகளே காணப்பட்டன. அதன் பின்னர் அதனை நாங்கள் ஏழாக மாற்றினோம்.

இதன்மூலம் புலனாய்வு பிரிவின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும்.அந்த புலனாய்வு கட்டமைப்பு நல்லாட்சி அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டது. முன்னர் நாங்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள்,தேவாலயங்கள் சாதாரண ஹோட்டல்கள்; ஏன் வீதியோரங்களில் கூட புலனாய்வுப் பிரிவினரை பணியில் அமர்த்தினோம்.

ஏதாவது நடந்தால் எங்களுக்கு உடனடியாக தகவல் கிடைக்கும். நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் இந்த வலையமைப்பு அழிக்கப்பட்டது.தற்போது அதனை நாங்கள் வலுப்படுத்தியுள்ளோம். அது சிறப்பாக செயற்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை,காத்தான்குடி பகுதிகளில் நாங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள் ளோம். நாங்கள் அந்த பகுதியில் எங்கள் புலனாய்வாளர்களைப் பணியில் அமர்த்தியுள்ளதுடன் பாதுகாப்பு படையினருக்கும் அறிவித்துள்ளோம்.  ரோந்தினை அதிகரித்துள்ளதுடன் எங்களுக்கு தகவல் வழங்குபவர்களை அங்கு நிறுத்தியுள்ளோம். அவர்கள், எங்களுக்கு அவசியமான தகவல்களை வழங்குவார்கள்.

காத்தான்குடி மாத்திரமல்ல ஏனைய சில பகுதிகளுக்கும் நாங்கள் முக்கியத்துவத்தை வழங்கியுள்ளோம்  எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.  

  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X