2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

“900 மில்லியனுக்கே எம்.பி பதவியை துறந்தார்”

Editorial   / 2024 ஜனவரி 10 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய பிள்ளைகளை பாடசாலைகளுக்கு கொண்டுச் செல்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. மக்கள் சாபம் விடுகின்றனர். குழந்தைகளுக்கும் குடும்பத்துக்கும் சாபம் விடுகின்றனர் என்று  கூறியே, பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் எனத் தெரிவித்த மஹிந்தானந்த அளுத்கமகே, அவர், 900 மில்லியன் ரூபாவை பெற்றுக்கொண்டே, குடும்பத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ளார் என்றார்.

எங்களுடைய பிள்ளைகளும் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். இங்கிருக்கும் 224 எம்.பிகளுக்கு அவ்வாறான பிரச்சினைகள் இல்லை. அவர்களின் பிள்ளைகளும் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். அவர்களுக்கும் எவ்விதமான பிரச்சினைகள் இல்லை. ஆனால், சமிந்த விஜேசிறியின் கூற்று 224 எம்.பிக்களையும் அவமதிக்கும் செயலாகும் என்றும் பாராளுமன்றத்தில் புதன்கிழமை (10) தெரிவித்தார்.

அத்துடன் பட்டியலில் அடுத்ததாக இருக்கும் நபர், இரட்டை பிரஜாவுரிமையை கொண்டவர் என்றார்.

இதனிடையே மற்றுமொரு சந்தர்ப்பத்தில் எழுந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எம்.பி., சமிந்த விஜேசிறி தொடர்பில் தவறான கருத்துகள் முன்வைக்கப்பட்டன. அவருடைய அரசியல் பயணம் பற்றி நன்கறிந்தவன். அத்துடன், அவருடைய வெற்றிடத்துக்கு நியமிக்கவிருக்கும் நபருக்கு இரட்டை பிரஜாவுரிமை இருப்பதாக கூறப்பட்டது. அவ்வாறான இரட்டை பிரஜைவுரிமை இல்லை என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .