2025 மே 07, புதன்கிழமை

’AC அறைகளில் கொரோனா வேகமாகப் பரவுகிறது’

Nirosh   / 2020 ஒக்டோபர் 13 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில்  முன்பிருந்ததைவிட,   இம்முறை கொரொன வைரஸ் பரவல் உக்கிரமடைந்துக்  காணப்படுவதாகத் தெரிவித்த வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அநுருத்த பாதெனிய, குளிரூட்டப்பட்ட  பகுதிகளுக்குள் வைரஸ் பரவல் உக்கிரமடைந்து காணப்படுவதாகவும்  தெரிவித்தார்.  

ஒப்பீட்டளவில் உஷ்னம் மற்றும் சூரிய வெளிச்சம் அதிகளவில் படுகின்ற பகுதிகளில்,  கொரோனா வைரஸின் தொழிற்பாடு மந்த நிலையிலேயே காணப்படுவதாகவும்  அவர் தெரிவித்தார்.  

இது தொடர்பாக ஊடகமொன்றுக்கு மேலும் கருத்துரைத்த அவர்,  தற்போது கண்டறியப்பட்டுள்ள கொரோனா  கொத்தணியில் உள்ளவர்களுக்கு,  வெளிநாட்டவர்களிடமிருந்தே வைரஸ் தொற்று பரவியிருக்கலாமென சந்தேகிப்பதாகவும்,  தற்போது அடையாளம் காணப்படுவோரின் வைரஸ் செறிவுத் தன்மை அதிகமாக காணப்படுவதாகவும் அவர்  தெரிவித்தார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X