2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

​‘அடக்கும் வரை அதைச் செய்யமாட்டேன்’

A.Kanagaraj   / 2020 நவம்பர் 05 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொறுப்பு செயற்பாட்டுத் தேவை தொடர்பில் கவனத்தை செலுத்திய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஊரடங்குச் சட்டத்தை பிரகடனப்படுத்தி மக்களின் நடமாட்டத்தை தொடர்ச்சியாக கட்டுப்படுத்தமுடியாது. மக்களின் வாழ்க்கை, நாட்டின் பொருளாதாரம் ஏனைய ​துறைகள் தொடர்பில் சமாந்தரமாக கவனத்தில் எடுத்து, தீர்மானங்களை எடுக்க​வேண்டுமென வலியுறுத்தினார்.

“வைரஸை அடக்குவதற்குத் தீர்வொன்று கிடைக்கும் வரையிலும் நாட்டை முழுயாக மூட முடியாது” என்றும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். 

கொரோனா வைரஸ தடுப்பதற்காக தயாரிக்கப்பட்ட  “பாதுகாப்பாக இருங்கள்” டிஜிட்டல் செயற்றிட்டம், ஜனாதிபதி செயலகத்தில் வைத்து நேற்று (04) ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதன் பின்னர், அங்கு கருத்துரைத்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, மேல் மாகாணம் உள்ளிட்ட நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களில், கொரோனா வைரஸை ஒழிப்பதற்காகவும் பரவாமல் இருப்பதற்காகவும் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களையும் அதன் தற்போதைய நிலைமைகளையும் கொவிட்- 19 செயலணி ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்தியது.

வைரஸை அடக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை தேடும் வரையிலும் நாட்டை முழுமையாக மூடி வைத்திருக்க முடியாதெனத் தெரிவித்த ஜனாதிபதி சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, சகலரும் தங்களுடைய அன்றாட கடமைகளை சாதாரணமாக முன்னெடுப்பதற்கு தயாராகவே இருக்கவேண்டும் என்றார்.

இதேவேளை, வைரஸ் பரவாமல் இருப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்காகவும் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் ஜனாதிபதி பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X