2025 மே 07, புதன்கிழமை

‘அதிரடி அறிவிப்பால் மக்கள் திண்டாட்டம்’

Editorial   / 2020 நவம்பர் 09 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைர​ஸை கட்டுப்படுத்துவதற்கும், அத்தொற்றிலிருந்து முழுமையாக பாதுகாத்துகொள்ளும் வகையிலும் அரசாங்கம், துறைசார் அமைச்சுகள், நிறுவனங்கள் பல்வேறானா அறிவிப்புகளை அவ்வப்போது விடுகின்றன.

இதில், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில், மீளவும் ஊரடங்கு தளர்த்தப்பட்டது. இன்னும் சில பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.

“முடக்கம்” என்றால் என்ன?, “தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம்” என்றால் என்ன? என்பது தெரியாமல், மக்கள் திண்டாடுகின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் பல இடங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொழும்பிலிருந்து ​வர​வேண்டாம் என வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்படுகின்றது. பயணங்களை தடுக்கும் வகையில் “பயணத் தடையும்” போடப்பட்டுள்ளது.

இதேவேளை, “கொழும்புக்கு வரவேண்டாம்' என வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

“போகவும் முடியாது, வரவும் கூடாது” என்றால் எப்படிதான், இருப்பது என தங்களுக்குள் தாங்களே! கேள்விகளை எழுப்பிக்கொள்கின்றனர்.

இந்நிலையில், விசேட அறிவிப்பொன்றை விடுத்துள்ள  இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, “கொழும்பு நகருக்குள் பிரவேசிப்பதை, முடிந்தளவுக்கு குறைத்துக்கொள்ளுமாறும் அத்தியாவசியக் காரணமின்றி, கொழும்பு நகருக்குள் பிரவேசிப்பதைத் தவிர்த்துக்கு கொள்ளவும்” என வலியுறுத்தியுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X