Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 01 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல், டில்லி லோதி மின் மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜி (84) உடல்நலக் குறைவு காரணமாக டில்லி இராணுவ மருத்து வமனையில் திங்கள்கிழமை காலமானார்.
அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மேலும், புது டில்லியில், 10, ராஜாஜி மார்க்கில் உள்ள இல்லத்தில் பிரணாப் முகர்ஜியின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதையடுத்து இன்று பகல் 1 மணியளவில், பிரணாப் முகர்ஜி யின் உடல் அவரது
இல்லத்தில் இருந்து லோதி மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிற்பகல் 2 மணியளவில் முழு அரசு மரியாதையுடன் உடல் எரியூட்டப்பட்டது.
அவருக்கு கொரோனா தொற்று இருந்ததால் கொரோனா சுகாதார வழிகாட்டு நெறிமுறைகளுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago
1 hours ago
2 hours ago