Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 மே 12 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்டகாலமாக பேசப்பட்டுவந்த நிலையில் அவர்களது பெயர் விவரங்கள் அடங்கிய மகஜர் ஒன்றை ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (12) மாலை கையளித்துள்ளனர்.
பிரதமரின் விஜயராம இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போதே குறித்த விடயம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கான தீர்வு கோரிய மகஜர் பிரதமரிடம் வழங்கிவைக்கப்பட்டது.
இதன்போது நீண்டகாலமாக சிறைகளிலிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதுடன் அவர்களது பெயர் விவரங்கள் பிரதமரிடம் கையளிக்கப்பட்டன.
அத்துடன் காணாமல் போன உறவுகளின் கண்ணீருக்குப் பரிகாரம் காணப்படுவதை விரைவுபடுத்த வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட குழுவினரால் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும் விவசாயத்துக்குப் பொருத்தமான தரிசு நிலங்களை விடுவித்து விவசாயம் செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு பெற்றுக்கொடுத்து விவசாய நடவடிக்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்க ஏது நிலைகளை உருவாக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் கல்வியில் பெரு வீழ்ச்சிகண்டுள்ள யாழ். மாவட்டத்தை அதிலிருந்து மீட்டு முன்னேற்றுவது தொடர்பாகவும் அதற்கான வழிமுறைகளை உருவாக்குவது தொடர்பாகவும் பிரதமரிடம் ஈழ ஜமக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளால் சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் தீவக பகுதியின் குடிநீருக்கு தீர்வுகாணும் முகமாக கடல் நீரை நன்னீராக்கும் திட்டங்களை அப்பிரதேசங்களில் உருவாக்கல், கொரோனா முடக்க நிலை காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து சொந்த மாவட்டங்களுக்கு மீளவும் திரும்பமுடியாதுள்ளவகளை அவரவர் இடங்களுக்கு மீளவும் அனுப்ப விரைவான நடவடிக்கை மேற்கொள்ளல் நாட்டில் இருக்கக்கூடிய ரின் மீன் தொழிற்சாலைகளை மீள இயக்க நடவடிக்கை எடுத்தல் என்பவற்றுடன் நாட்டிலுள்ள நான்கு மீன்பிடி துறைமுகங்களை புனரமைப்பது தொடர்பிலும் பிரதமரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
அத்துடன் ஒலுவில் துறைமுகத்தை துறைமுக அதிகார சபையிடமிருந்து பொறுப்பேற்று கடற்றொழிலாளர்களுக்கு பயன்படும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் பிரதமரிடம் கோரிக்கை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளால் பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.
பிரதமருடனான குறித்த சந்திப்பின்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின், அமைச்சரின் ஆலோசகர் தவராசா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலருடன் பிரதமரின் செயலாளர் மற்றும் துறைசார் செயலாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
39 minute ago
1 hours ago
2 hours ago