Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2018 ஜூன் 17 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அர்ஜுன் அலோசியஸுக்குச் சொந்தமான பர்பெஷுவல் ட்ரசரீஸ் நிறுவனத்திடமிருந்து, பல்வேறுபட்ட தரப்பினருக்கு, 45 ஆயிரம் தடவைகளில், இலட்சக்கணக்கான பணம் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது என, இவ்விவகாரம் தொடர்பான விசாரணைகளை நடத்திவரும் இரகசியப் பொலிஸாருக்கு, தகவல் கிடைத்துள்ளது.
பர்பெஷுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் சகோதர நிறுவனங்களான “டபிள்யூ.எம்.மெண்டிஸ்” மற்றும் “வோல்ட் அன்ட் ரோ” ஆகிய நிறுனங்களின் ஊடாகவே, இந்தப் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதெனவும் இதற்கான குறிப்பிட்ட நபர்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள், வேறு நபர்களது பெயர்களால் மாற்றப்பட்டுள்ளதாகவும், விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அவ்வாறு பணம் பெற்றுக்கொடுக்கப்பட்ட நபர்கள் தொடர்பான தகவல்கள், பர்பெஷுவல் ட்ரசரீஸ் நிறுவனப் பதிவுகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் பலரது பெயர்கள், முதலெழுத்துகளாக மாத்திரமே உள்ளடக்கப்பட்டுள்ளதால், உரிய நபர்கள் யாரென்பதை உறுதிப்படுத்திக்கொள்ள முடியாதுள்ளதாகவும் தெரிவித்துள்ள இரகசியப் பொலிஸார், எவ்வாறாயினும், குறித்த முதலெழுத்துகளுக்குரிய நபர்கள் யாரென்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியால், கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதியன்று, பொலிஸ் மா அதிபரிடம் செய்த முறைப்பாட்டுக்கமைய, இரகசிய பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் போதே, மேற்படி தகவல் வெளியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
17 May 2025
17 May 2025