Editorial / 2020 செப்டெம்பர் 27 , பி.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆரம்பத்தை மறந்தமையே ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய நிலைக்குக் காரணமென, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் ஐக்கிய தேசிய கட்சி அலுவலகம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும் போதே,அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஐக்கிய தேசிய கட்சி என்ற ரீதியில் பொது தேர்தலில் பாரிய பின்னடைவுகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டது.அதன் பொறுப்பை கட்சி என்ற ரீதியில் நாங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் அரசாங்கத்தை அமைத்து பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம்.
எனினும் எமக்கு ஆரம்பம் மறந்து விட்டது. நாம் எமது கட்சியினரை மறந்தோம். எமது அரசாங்கம் இருக்கும் போது உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்கவில்லை. அமைச்சர்கள் என்ற ரீதியில் நாம் அமைச்சுகளில் வேலைசெய்தோம். ஆனால் எமது தரப்பினருக்கு அமைச்சர்கள் அருகில் செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் தான் கட்சி உறுப்பினர்கள் எம்மை விட்டு விலகினர். இதனாலேயே எமது கட்சி இரண்டாகப் பிளவுபட்டது. இதனால் தான் பொதுத் தேர்தலில் எமக்கு இவ்வாறனதொரு பெறுபேறுகள் கிடைத்தன என்றார்.
28 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago